புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 மார்ச் 2022 (09:26 IST)

நின்னு நிதானமா சாதனைப் படைத்த குட்டி ஸ்டொரி பாடல்!

விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தில் இடம்பெற்றிருந்த குட்டி ஸ்டோரி பாடல் பர்ஸ்ட் சிங்கிளாக ரிலிஸானது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் ”மாஸ்டர்”. கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்திருந்தார். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க, மாளவிகா மோகனன் மற்றும் நாசர் உள்ளிட்டவர்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசையில் இந்த படத்தின் முதல் பாடலான “குட்டி ஸ்டோரி”  வெளியானது. நடிகர் விஜய்யே பாடிய இந்த பாடல் விஜய் ரசிகர்களால் மட்டுமில்லாமல் பலராலும் விரும்பி கேட்கப்பட்ட பாடலாக அமைந்துள்ளது.

இந்நிலையில் ரிலீஸ் ஆகி 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இப்போது இந்த பாடல் யுடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது. சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் ஹலமதி பாடல் 125 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த வெறித்தன ஹிட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.