குற்றமே தண்டனை செப் 2 வெளியாகிறது


Sasikala| Last Modified திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (12:15 IST)
மணிகண்டனின் இரண்டாவது படம் செப்டம்பர் 2 வெளியாவது உறுதியாகியுள்ளது.

 
 
இளையராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். விதார்த்தே படத்தை தயாரித்துள்ளார். ஒரு கொலை அது சார்ந்தவர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை குற்றமே தண்டனை சொல்கிறது. 
 
பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இத்திரைப்படம் சென்சாருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அவர்கள் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளித்தனர். செப்டம்பர் 2 படம் வெளியாவதை படக்குழு உறுதி செய்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :