1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 14 மே 2024 (11:23 IST)

அறிமுக நாயகன் தருண் -அறிமுக நாயகி செஷ்வித்தா நடிக்கும் "குற்றம் புதிது" படம் பூஜையுடன் துவங்கியது!

அறிமுக இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இந்த படத்தில் காதநாயகனாக தருண் நடிக்கிறார். செஷ்வித்தா நாயகியாக நடிக்கிறார். மதுசூதன் ராவ், ராமசந்திரன், பாய்ஸ் ராஜன்,பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா மற்றும் தினேஷ் செல்லையா,ஸ்ரீகாந்த்,மீரா ராஜ்,டார்லிங் நிவேதா ஆகியோர் நடிக்கிறார்கள்.
 
ரஜித்,கிரிஷ் பாடல் வரி எழுத,ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கரண் B கிருபா இசையமைக்கிறார் ,
 
அதிரடியாக உருவாகும்இந்த படம்  “கற்பனைக்கு அப்பாற்பட்டதை எதார்த்தமான பாணியில் பேச காத்திருக்கிறது.
 
இந்த படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேபில் சிறப்பாக நடைபெற்றது.
 
இம்மாதம்  23-ம் தேதி தொடங்கும் இப்படப்பிடிப்பு ஒரேகட்டமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.