திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: சனி, 2 ஜனவரி 2021 (18:22 IST)

’சின்னதம்பி’ தயாரிப்பாளர் மரணம்; குஷ்பு போட்ட இரங்கல் டுவீட்!

சின்னதம்பி உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த கேபி பிலிம்ஸ் பாலு அவர்கள் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
கடந்த சில நாட்களாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை காலமானதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர் 
 
இதனை அடுத்து ஒட்டுமொத்த திரையுலகினர் கேபி பாலு அவர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத திரைப்படமான சின்னத்தம்பி படத்தை தயாரித்தவரின் மறைவு குஷ்புவை ரொம்பவே வருத்தம் அடையச் செய்துள்ளது, இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
எனது மிகப் பெரிய வெற்றிப் படமான சின்னதம்பியின் தயாரிப்பாளம் மறைவை பற்றி கேள்விப்பட்டதில் இருந்தே மிகுந்த மன உளைச்சலுடன் உள்ளேன். அவர் எங்களுடன் இல்லை என்பதை மறக்கவே முடியவில்லை. அவர் நீண்ட காலமாக உடல்நலக்குறைவுடன் தனது உடல்நலத்துடன் போராடினார். அவர் அதை வெல்ல முடியும் என்றும் விரும்பினார். ஆனால் அது நடக்கவில்லை. அவரது குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கல்’ என்று தெரிவித்துள்ளார்.