வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 30 மே 2020 (10:01 IST)

சுசுபு ஆண்டி... இன்னும் விக் தான் வைக்கிறீங்களா ? ஆசாமிக்கு குஷ்பு பளார் ரிப்ளை!

தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து ரசிகர்களின் பேஃவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.  இவர் கடந்த 2001ம் ஆண்டு சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். திருமண வாழ்க்கைக்கு பிறகும் வெள்ளித்திரைகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக்கொண்டே தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் குஷ்பூ, தன்னை குறித்தோ, தனது மகள்களை குறித்தோ யாரேனும் கிண்டலடித்தால் சம்மந்தப்பட்ட நபரை வெளுத்து வாங்கி அசிங்கப்படுத்திவிட்டு தான் மறுவேலை பார்ப்பார். அந்தவகையில் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா ஊரடங்கினாள் புலம் பெயர் தொழிலாளர்களின் இன்னல்கள் குறித்தும் பேசியிருந்தார்.

நாட்டை குறித்தும் நாட்டு மக்களை குறித்து குஷ்பு உருக்கமாக பேசியிருந்த அந்த வீடியோவிற்கு கீழ் இணையவாசி ஒருவர் " சுசுபு ஆண்டி...  இன்னும் விக் தான் வைக்கிறீங்களா ? என கிண்டலாக கமெண்ட்ஸ் செய்ய அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் குஷ்பு,  " இந்த முட்டாள் பீசு எங்கிருந்து வந்துச்சு ? தலையில்லா முண்டமே...  உன்னுடைய முகத்தையும் உன்னுடைய நிஜ பெயரையும் தைரியமாக உலகிற்கு காட்ட முடியுமா? கோழையே, நீ என்னுடைய முடியை பார்த்து ரொம்ப பொறாமைப்படுறன்னு மட்டும் எனக்கு நல்லா புரியது. என கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.