வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 6 டிசம்பர் 2021 (10:57 IST)

அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை… கிருத்திக உதயநிதி கருத்து!

தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்று உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் திமுகவின் அடுத்த முகமாக முன்னிறுத்தப்படுகிறார். இந்நிலையில் அவரின் மனைவி திரைப்பட இயக்குனர் கிருத்திகா உதயநிதியிடம் கணவரைப் போல அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் குதிரைகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருத்துவ முகாமினை சென்னை ஓமந்தூரார் விருந்தினர் தோட்டத்தில் கிருத்திகா உதயநிதி திறந்துவைத்தார். அப்போதும் அவரிடம் இந்த கேள்வியை பத்திரிக்கையாளர்கள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த கிருத்திகா ‘அதற்கான எந்த திட்டமும் இல்லை’ எனக் கூறியுள்ளார்.