புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (20:23 IST)

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி படத்தில் விவேக்கிற்கு பதில் யார்?

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி என்று கூறப்படும் லெஜெண்ட் சரவணன் தற்போது ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் மறைந்த நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடித்து வந்ததாகவும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் நண்பராக படம் முழுவதும் வரும் கேரக்டரில் நடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தற்போது விவேக் மறைந்து விட்டதால் அவரது காட்சியை தொடர்வது எப்படி என்று குழப்பம் படக்குழுவினர்களுக்கு இருந்தது. இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த பாலு என்பவரும் விவேக் போலவே இருப்பதை அறிந்து அவரை வைத்து மீதி காட்சிகளை படமாக்க உள்ளதாக படக்குழுவினர் இருந்து தகவல் வந்துள்ளது