திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வெள்ளி, 9 மார்ச் 2018 (11:33 IST)

பலியான உஷாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் தருவதாக அறிவித்த கமல்ஹாசன்

திருச்சியில் பலியான உஷாவின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் தருவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 
போக்குவரத்து காவல் ஆய்வாளர் எட்டி உதைத்தால், பைக்கில் இருந்து தவறி விழுந்து இறந்தார் கர்ப்பிணியான உஷா. திருச்சியில் நடந்த இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்க்குள்ளாக்கி இருக்கிறது. சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்துள்ள தமிழக அரசு, உஷாவின் குடும்பத்துக்கு  7 லட்ச ரூபாய் நிவாரணம் அளித்துள்ளது.
 
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனும் உஷாவின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நேற்று ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. அதில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.
 
முதலில் 2 லட்ச ரூபாய் தருவதாக அறிவித்த கமல்ஹாசன், சிறிது நேரத்தில் 10 லட்ச ரூபாயாக உயர்த்தி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.