1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 25 ஆகஸ்ட் 2021 (14:53 IST)

கணவரின் பிறந்தநாளுக்கு ரொமான்டிக்கா வாழ்த்து கூறிய கிகி விஜய்!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் கீர்த்தி. இவர் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கீர்த்தி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார்.
 
இதற்கிடையில் டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார். திருமணம் ஆன பிறகும் கேரியரில் தான் நினைப்பதை தொடர்ந்து சாதித்து வருகிறார் கீர்த்தி. இதேபோல் அவரது கணவர் சாந்தனுவும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது சொல்லவரும் விஷயம் என்னவெனில், அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய கணவர் சாந்தனுவுக்கு வாழ்த்து சொன்ன கிகி, அவரை கட்டியணைத்து ரொமான்டிக்காக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, பிரார்த்தனையுடன் கூடிய வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இந்த அழகிய ஜோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.