செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 22 ஜூலை 2020 (07:28 IST)

நீங்க ஆம்பளையா இருந்திருக்கலாம்... இணையத்தை தெறிக்க விடும் நடிகை குஷ்பு!

தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து ரசிகர்களின் பேஃவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.

இவர் கடந்த 2001ம் ஆண்டு சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். திருமண வாழ்க்கைக்கு பிறகும் வெள்ளித்திரைகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக்கொண்டே தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூகத்தில் நடக்கும் அவலங்களை குறித்து கருத்து தெரிவிப்பார். எப்போதும் ட்விட்டரில் ஆக்டீவாக செயல்பட்டு வரும் நடிகை குஷ்பு தற்ப்போது ஆண் போல் மாறிய ஃபேஸ் ஆப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு அப்படியே அடாப்ட் ஆகியுள்ள குஷ்புவிடம் அந்த மூக்குத்தியை மட்டும் கழட்ட சொல்லி கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், கணேஷ் வெங்கட்ராமனுக்கு அம்மா போன்று இருப்பதாவதும்  சிலர் கலாய்த்து வருகின்றனர்.