1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2022 (15:31 IST)

இரும்புப் பட்டறையில் வேலை செய்த கேஜிஎஃப் இசையமைப்பாளர்… இணையத்தில் வெளியான புகைப்படம்!

கேஜிஎஃப் 1 மற்றும் 2 ஆகிய படங்களின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் கொரோனா காலத்தில் தந்தைக்கு உதவியாக பட்டறையில் வேலை செய்த புகைப்படம் தற்போது பரவி வருகிறது.

கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

இந்த படம் 10000 திரைகளில் உலகம் முழுவதும் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் இரண்டு நாட்களில் மட்டும் இந்திய அளவில் 240  கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதையடுத்து இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் அனைவரும் இப்போது கவனிக்கப்படும் நபர்களாக மாறியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தனது தந்தையின் இரும்பு பட்டறையில் வேலை செய்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.