ராக்கி பாய் மாஸ் எண்ட்ரிக்கு வெயிட்டிங்! – ட்ரெய்லரை வெளியிடும் பிரபலங்கள்!
கேஜிஎப் 2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதன் பல மொழி ட்ரெய்லர்களையும் பல திரை பிரபலங்கள் வெளியிட உள்ளனர்.
கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கேஜிஎஃப் சாப்டர் 2 ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதன் டூஃபான் என்ற முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டாகியுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில் வரும் 27ம் தேதி ட்ரெய்லர் வெளியிடப்படுகிறது.
இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை இந்தி இயக்குனர் கரன் ஜோஹர் தொகுத்து வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ஒவ்வொரு மொழி ட்ரெய்லரையும் முக்கிய திரை பிரபலங்கள் பலர் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.