புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 31 மே 2021 (10:38 IST)

இனாயத் கலீலுடன் இணைந்து ராஜ்யத்தை பிடிக்கிறாரா ராக்கி பாய்? – பிறந்தநாள் வாழ்த்துடன் வந்த கேஜிஎஃப் அப்டேட்!

கேஜிஎஃப் படத்தில் நடித்துள்ள வில்லன் நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ள இயக்குனர் பிரசாத் நீல் கூடவே முக்கிய அப்டேட் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

கன்னட சூப்பர் ஸ்டார் யஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் கேஜிஎஃப் அத்தியாயம் 1. இந்தி, தமிழ், தெலுங்கு என பல இந்திய மொழிகளில் வெளியான இந்த படம் மிகப்பெரும் வசூல் சாதனை படைத்தது. அதை தொடர்ந்து கேஜிஎஃப் அத்தியாயம் 2 க்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில் இந்த ஆண்டில் ஜூலை 16ல் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இன்று கேஜிஎஃப் படத்தில் முக்கிய வில்லன் கதாப்பாத்திரமான இனாயத் கலீல் கதாப்பாத்திரத்தில் நடித்த பாலகிருஷ்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இயக்குனர் பிரசாத் நீல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் செய்தி தாள் டிசைனில் , இனாயத் கலீலுடன் இணைந்து நராச்சி சாம்ராஜ்யத்தை பிடிக்க போவது யார்?” என தலைப்பு உள்ளது. மேலும் இந்தியாவில் ரகசியமான இடத்தில் இனாயத் கலீல் மறைந்துள்ளதாகவும் அதில் க்ளூ போல கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் பாகத்தில் கேஜிஎஃப் தங்க சுரங்கத்தை கைப்பற்ற காத்திருப்பவர்களில் முக்கிய வில்லனாக இனாயத் கலீல் காட்டப்பட்டுள்ளதால் இந்த அப்டேட்கள் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.