புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 ஜனவரி 2021 (09:00 IST)

ஒரே நேரத்தில் அடுத்தடுத்து வந்த இரண்டு ராக்கி பாய் டீசர்கள்! – ரசிகர்கள் கொண்டாட்டம்!

கொரோனா காரணமாக புதிய படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் இரண்டு ராக்கி பாய்களின் டீசர்கள் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

கன்னட நடிகர் யஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கியிருக்கும் படம் கேஜிஎப் 2. இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்ட நிலையில் இன்று டீசர் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சர்ப்ரைஸாக நேற்று இரவே இதன் டீசர் வெளியானது. அனல் பறக்கும் டீசரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பாரதிராஜா, வசந்த் ரவி ஆகியோர் நடித்துள்ள ‘ராக்கி’ படத்தின் டீசரும் நேற்று மாலை வெளியானது. வன்முறையை களமாக கொண்ட இந்த படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில் இதுவும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாப்பட்டு வருகிறது. ஒரே சமயத்தில் ராக்கி பாய் மற்றும் ராக்கி டீசர்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.