செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : புதன், 16 நவம்பர் 2022 (12:26 IST)

சன்னிலியோன் மீது பணமோசடி வழக்கு: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

sunny
பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கின் விசாரணையில் கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
நடிகை சன்னிலியோன் கடந்த 2019 ஆம் ஆண்டு மேடை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்காக 20 லட்சம் முன்பணம் பெற்றுக்கொண்டு ஒப்புக் கொண்டார் என்றும் ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவில்லை என்றும் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டது
 
 இதனையடுத்து சன்னி லியோன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லாததால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்த வழக்கு நீண்ட காலமாக இழுத்துக்கொண்டே இருப்பதால் தனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்
 
இதனையடுத்து நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார். மேலும் இந்த வழக்கு மீண்டும்ன் விசாரணைக்கு வரும் வரை சன்னி லியோன் மீது எந்தவிதமான குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டார்
 
Edited by Siva