வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (07:35 IST)

இந்தி எதிர்ப்பைப் பேசிவிட்டு பாலிவுட் படத்தில் நடிக்கலாமா?.. கீர்த்தி சுரேஷின் பதில்!

கேஜிஎப், காந்தாரா உள்பட சூப்பர் ஹிட் படங்களை எடுத்த ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ’ரகு தாத்தா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பேமிலி மேன் சீரியஸுக்கு கதை எழுதியவர்களில் ஒருவரான சுமன் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தில் கீர்த்தி சுரேஷுடன் எம் எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ஆனந்த் ராஜ், ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர்  முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். யாமினி ஒளிப்பதிவு செய்ய ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ் “ரகு தாத்தா இந்தி திணிப்புக்கு எதிரான படம். இதுபோன்ற படத்தைத் தமிழ்நாட்டில் மட்டும்தான் எடுக்க முடியும். இந்திக்கு எதிராகப் பேசிவிட்டு, இந்தி படத்தில் நடிக்கலாமா என்ற கேள்வி எழலாம்.

இந்தி மொழியை எதிர்க்கவில்லை. ஆனால் இந்தி திணிப்பைதான் எதிர்க்கிறோம். இந்த படம் பெண்ணியத்திற்காக போராடியக் கூடிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். பெண்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கலாச்சாரம் என்ற பெயரில் செய்யப்படும் திணிப்புகலை எதிர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.