வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 22 ஜூலை 2024 (07:41 IST)

இந்தி திணிப்புக்கு எதிரான படம் இல்லை ‘ரகு தாத்தா’ – இயக்குனர் சுமன் குமார் பதில்!

கேஜிஎப், காந்தாரா உள்பட சூப்பர் ஹிட் படங்களை எடுத்த ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ’ரகு தாத்தா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பேமிலி மேன் சீரியஸுக்கு கதை எழுதியவர்களில் ஒருவரான சுமன் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தில் கீர்த்தி சுரேஷுடன் எம் எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ஆனந்த் ராஜ், ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர்  முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். யாமினி ஒளிப்பதிவு செய்ய ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. அதில் பேசிய இயக்குனர் சுமன்குமார் “இந்த படம் இந்தி திணிப்புக்கு எதிரான படம் இல்லை. பெண்கள் மீதான திணிப்புக்கு எதிரான படம். எனக்கு தெரிந்த ஒருவர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார். ஆனால் அவரே தன்னுடைய பதவி உயர்வுக்காக இந்தியில் தேர்வெழுத வேண்டிய சூழல் வந்ததாம். அதை மையமாக வைத்துதான் இந்த படத்தை உருவாக்கியுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.