அட்லியின் பாலிவுட் தயாரிப்பான பேபி ஜான் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் தெறி. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் ஹிந்தியில் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தை அட்லி மற்றும் இன்னொரு பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்கி வரும்ம் இந்த படத்தில் விஜய் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார். இந்த படத்தின் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடித்து வருகின்றனர். மைக்கேல் படத்தின் ஒளிப்பதிவாளர் கிரண் கௌஷிக் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.
பேபி ஜான் என தலைப்பிடப்பட்ட இந்த படம் மே 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஷூட்டிங் உள்ளிட்ட சில பணிகள் முடியாத காரணத்தால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 25 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.