1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 25 மே 2023 (12:29 IST)

ஹீரோவிற்கு இணையான சம்பளம் வேண்டும் - நினைத்ததை சாதித்த பிரியங்கா சோப்ராவுக்கு வாழ்த்து!

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா மிஸ் வேர்ல்ட் 2000 போட்டியில் வெற்றி பெற்று பின்னர் சினிமாவில் ஹீரோயின் ஆனார். இவர் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். 
 
இவர் பாப் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டார். பாலிவுட்டின் முக்கிய நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா, கடந்த சில ஆண்டுகளாக ஹாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். 
 
இந்நிலையில் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரொம்ப வருஷங்களாக நான் எதிர்பார்த்து கேட்ட ஹீரோவுக்கு இணையாக ஹீரோயின்களுக்கு சம்பளம் கொடுங்கள் என்பது தற்போது நடந்துள்ளது. இந்த இடத்திற்கு வருவதற்கு எனக்கு 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. என கூறியிருந்தார். 
 
இதையடுத்து ஸ்ருதி ஹாசன் நடிகை பிரியங்கா சோப்ரா சாதித்து காட்டிவிட்டதாக அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார். மேலும், "நாங்கள் எல்லாம் இன்னும் உழைத்துக்கொண்டு இருக்கிறோம். நமது சினிமா துறையில் ஹீரோவிற்கு இணையான சம்பளம் குறித்து எந்த பேச்சும் எழுவது இல்லை. ஹீரோக்களுக்கு சமமான சம்பளம் கதாநாயகிகளுக்கு கிடைக்கும் நாள் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்தார்.