புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 28 டிசம்பர் 2018 (17:56 IST)

கீர்த்தியின் வருங்கால கணவர் இவர்தானாம் !

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு இந்த 2018 சிறப்பான வருடமாக அமைந்துள்ளது. நடிகையர் திலகம், சாமி 2, சர்கார், சண்டக்கோழி 2 , தானா சேர்ந்த கூட்டம் , எவடு 3 போன்ற பல படங்கள் அவர் நடிப்பில் இந்த வருடம் வெளியாகியுள்ளது. 


 
இந்நிலையில், புத்தாண்டு சிறப்பாக தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளார் கீர்த்தி. அப்போது விஜய், அஜித், விக்ரம், சூர்யா, விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களை திரையில் காண்பித்து உங்களுடைய வருங்கால கணவர் இதில் யாரைப்போல் இருக்க வேண்டும் என்ற கேள்வி கேட்கப்படுகிறது.   
 
சற்றும் யோசிக்காத கீர்த்தி, 'தளபதி மற்றும் விக்ரம் சார்' போல் இருக்க வேண்டும் என்கிறார். 
 
இந்நிகழ்ச்சியில், பழம்பெரும் நடிகை சரோஜா தேவியும் கலந்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.