திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 2 ஜூலை 2018 (21:34 IST)

எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் முடியாது: கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் நுழைந்த குறுகிய காலக்கட்டத்திலேயே பெரிய ஹீரோக்களுடன் நடித்து புகழையும் ரசிகர்கள் பலரையும் பெற்றுள்ளார். 
 
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள படங்கலும் அவர் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படம் இவரது நடிப்பிற்கு பெரும் பாராட்டை பெற்றுத்தந்தது. 
 
தற்போது அவர் சர்க்கார், சண்டக்கோழி 2, சாமி ஸ்கொயர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கவர்ச்சி காட்டாமல் குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்துவரும் கீர்த்தி சுரேஷ்.
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் எப்போதும் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன். எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் முத்தக்காட்சியில் நடிக்கமாட்டேன் என தெரிவித்துள்ளார்.