சனி, 14 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2024 (12:37 IST)

தங்கலான், டிமாண்டி காலணி 2-க்கு நடுவே எடுபடாத ரகுதாத்தா… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கேஜிஎப், காந்தாரா உள்பட சூப்பர் ஹிட் படங்களை எடுத்த ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள ரகுதாத்தா திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பேமிலி மேன் உள்ளிட்ட தொடர்களுக்கு கதை எழுதிய சுமன் குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தங்கலான் மற்றும் டிமாண்டி காலணி 2 ஆகிய படங்களோடு ரிலீஸானது.

தங்கலான் மற்றும் டிமாண்டி காலனி 2 ஆகிய படங்களுக்கு மத்தியில் ரிலீஸான இந்த திரைப்படத்துக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாமல் குறைவான தியேட்டர்களிலேயே ரிலீஸானது.

இந்த படம் மோசமான விமர்சனங்களைப் பெறவில்லை என்றாலும் தங்கலான் மற்றும் டிமாண்டி காலணி 2 படங்களுக்குக் கிடைத்த அமோக வரவேற்பால் இந்த படம் கவனிக்கப்படாமல் போனது. இந்நிலையில் ரகுதாத்தா திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படம் செப்டம்பர் 13 ஆம் தேதி ஜி 5 தளத்தில் 5 மொழிகளில் ரிலீஸாக உள்ளது. ஓடிடியிலாவது இந்த படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.