செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (09:46 IST)

உதயநிதி & மாரி செல்வராஜ் படத்தில் கீர்த்தி சுரேஷ்?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் வடிவேலு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.