ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 1 பிப்ரவரி 2021 (16:12 IST)

சாணிக்காயிதம் படப்பிடிப்பு தளத்தில் கீர்த்தி சுரேஷ் – கவனத்தை ஈர்த்த புகைப்படம்!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் சாணிக்காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷும் செல்வராகவனும் நடித்து வருகின்றனர்.

ராக்கி என்ற படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கும் அடுத்தப் படமான சாணிக்காயிதம் படத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புத் தளத்தில் இயக்குனர் அருண் மாதேஸ்வரனும் கீர்த்தி சுரேஷும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.