1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (16:23 IST)

சாணிக் காயிதம் குழுவினரின் பாராட்டுகளைப் பெற்ற கீர்த்தி சுரேஷ்!

சாணிக் காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் தனது நடிப்பாற்றலால் படக்குழுவினரை வெகுவாகக் கவர்ந்துள்ளாராம்.

இயக்குனர் செல்வராகவனும் நடிகை கீர்த்தி சுரேஷும் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. படக்குழுவினர் படப்பிடிப்பை தொடங்கி நடத்திக் கொண்டு இருந்தபோது கொரோனா இரண்டாவது அலை வந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு ரத்து பின்னர் மீண்டும் தொடங்கி முடிந்துள்ளது.

இப்போது படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இந்த படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் ஓடிடி வெளியீட்டுக்கு முயற்சி நடக்கிறது.

இந்நிலையில் படத்தில் செல்வராகவனுக்கு தங்கையாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் தனது நடிப்பாற்றலால் படக்குழுவினரை வெகுவாகக் கவர்ந்துள்ளாராம். உருக்கமான ஒரு காட்சியில் நான்கு நிமிடம் சிங்கிள் டேக்கில் நடித்து அசத்தியுள்ளார். இந்த படம் வெளியாகும் போது கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படும் என சொல்லப்படுகிறது.