வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 4 ஜூலை 2018 (19:25 IST)

சிம்பு-வெங்கட்பிரபு படத்திற்கு கீர்த்திசுரேஷ் நாயகியா?

மணிரத்னம் இயக்கத்தில் 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு ஆக்சன் படத்தில் நடிக்கவுள்ளார். முழுக்க முழுக்க சீரியஸான இந்த படத்தின் ஆர்மபகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் முதல் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க நடிகை கீர்த்திசுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் சிம்புவிடன் கீர்த்திசுரேஷ் இணைவது இதுவே முதல் முறையாகும்
 
சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் அல்லது அனிருத் இசையமைப்பார்கள் என்று கூறப்படுகிறது.
 
கீர்த்திசுரேஷ் ஏற்கனவே விஜய்யின் 'சர்கார்', விக்ரமின் 'சாமி 2', விஷாலின் 'சண்டக்கோழி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.