நடிகை கடத்தலுக்கும், காவ்யா மாதவனுக்கும் சம்பந்தம் இல்லையாம்…


Cauveri Manickam (Murugan)| Last Updated: ஞாயிறு, 16 ஜூலை 2017 (12:14 IST)
கேரள நடிகை கடத்தப்பட்டதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார் நடிகை காவ்யா மாதவன்.

 

 
கேரள நடிகை, கடந்த பிப்ரவரி மாதம், காரில் கடத்தப்பட்டு பாலியன் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். அந்த வழக்கில் பல்சார் சுனில் உள்பட 6 பேரை கைதுசெய்த போலீஸார், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நடிகை திலீப்பை கைதுசெய்தனர். திலீப்புக்கும், காவ்யா மாதவனுக்கும் இடையிலான தொடர்பை, திலீப்பின் மனைவியான மஞ்சு வாரியரிடம் சொன்னவர் அந்த நடிகை. அதன்பிறகு திலீப்பை விவாகரத்து செய்துவிட்டார் மஞ்சு வாரியர்.
 
எனவே, இரண்டவதாக காவ்யா மாதவனைத் திருமணம் செய்து கொண்டார் திலீப். இதனால், நடிகை கடத்தல் விவகாரத்தில் காவ்யா மாதவனும் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், தன் தாயுடன் சில நாட்களுக்கு முன்பு தலைமறைவானார் காவ்யா மாதவன். பெங்களூரில் உள்ள தோழி வீட்டில் அவர் தங்கியிருப்பதை அறிந்த போலீஸார், விசாரணைக்கு வராவிட்டால் கைதுசெய்வோம் என்று எச்சரித்தனர்.
 
அதைத் தொடர்ந்து கேரளா வந்த காவ்யா மாதவனிடம், ரகசிய இடத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். 3 மணி நேரம் மேற்கொண்ட விசாரணையில், ‘நடிகையை சிறிதாக ஏதோ செய்யப் போகிறார்கள் என்றுதான் நினைத்தேன். இப்படி நடக்கும் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. எனக்கும், இந்தக் கடத்தல் சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று தெரிவித்துள்ளாராம் காவ்யா மாதவன்.


இதில் மேலும் படிக்கவும் :