வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2023 (09:00 IST)

ஊர்க்குருவி படத்தில் இருந்து நீக்கப்பட்டாரா கவின்? விக்னேஷ் சிவனும் விலகல்!

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கவின் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த டைட்டில் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து ஆரம்பித்த ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ஒரு சில திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் கவின் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இப்போது அந்த படத்தில் இருந்து கவின் விலகிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக அஸ்வின் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதே போல படத்தை தயாரிக்க இருந்த  விக்னேஷ் சிவனும் அதிலிருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.