'கத்துக்குட்டி' படத்துக்கு ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து!
'கத்துக்குட்டி' படத்தை இயக்கிவரும் இரா.சரவணன் பத்திரிகைத் துறையில் பணியாற்றிய போது ஆந்திராவின் பிரபல அரசியல் புள்ளியான ஜெகன் மோகன் ரெட்டிக்கு அறிமுகமானவர்.
இந்நிலையில், பத்திரிகைத் துறையிலிருந்து வெளிவந்து 'கத்துக்குட்டி' படத்தை இயக்கும் இரா.சரவணன், திடீர் நிகழ்வாக ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்தார்.
ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டில் நடந்த இந்தச் சந்திப்பின் போது தனது திரை அனுபவங்கள் குறித்துப் பேசியிருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன்.
படம் வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்த ஜெகன் மோகன் ரெட்டி, படத்தில் நடித்த அனைத்துக் கலைஞர்களுக்கும் தனது அன்பைச் சொல்லச் சொன்னாராம்.