1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (09:36 IST)

பிக்பாஸ் வீட்டில் கஸ்தூரி: திடீர் திருப்பம்

பிக் பாஸ் வீட்டில் சரவணனுடன் சேர்ந்து இதுவரை 6 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்பட்டால் மொத்தம் 7 பேர் வெளியேறி இருப்பார்கள். எனவே மீதமிருக்கும் 55 நாட்களில் 9 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக ஒருவர் அல்லது இருவர் நுழைய வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் காரசாரமாக விமர்சனம் செய்து வரும் நடிகை கஸ்தூரி விரைவில் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டில் கஸ்தூரி நுழைந்துள்ள காட்சிகள் உள்ளது. கஸ்தூரியை போட்டியாளர்கள் அனைவரும் வரவேற்ற நிலையில் கஸ்தூரி முதலில் சாக்சியிடம் நிறைய கேள்விகள் கேட்க வேண்டும் என்று கூறுகிறார். கவின் விவகாரம் குறித்து அவர் கேள்வி எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
பிக்பாஸ் வீட்டில் கஸ்தூரி போட்டியாளராக வந்துள்ளாரா? அல்லது சிறப்பு விருந்தினராக ஓரிரு நாட்கள் மட்டும் தங்கியிருந்து செல்வாரா? என்பதை இனிமேல்தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் கஸ்தூரியின் வரவு ஒரு  திடீர் திருப்பமாகவே கருதப்படுகிறது