மோடி, வாஜ்பாய் குறித்து கஸ்தூரி சர்ச்சை டுவிட்...
பிரதமர் மோடி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறித்து நடிகை கஸ்தூரி சர்ச்சைக்கு உரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் (93) நேற்று (வியாழக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில், "பாஜகவை பிடிக்காதவர்கள் இருப்பார்கள் ஆனால் வாஜ்பாய் அவர்களை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்" என பதிவு செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, கடந்த 2004-ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மோடியால் வாஜ்பாய் தோற்றுப்போனார், ஆனால் கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலில் வாஜ்பாயால் மோடி வெற்றிபேற்றார்" என குறிப்பிட்டிருந்தது.
கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த இனவாத வன்முறை, நூற்றுக்கனக்கான மக்களை காவு வாங்கியது. அப்போது, குஜராத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தது குறிப்பிடத்தக்கது.