வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: சனி, 28 அக்டோபர் 2017 (12:45 IST)

திமுகவில் இணைகிறேனா? - கஸ்தூரி விளக்கம்

தான் எந்த அரசியல் கட்சியிலும் இணையவில்லை. இது தொடர்பாக வெளியான அனைத்து செய்திகளும் வதந்தியே என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.


 

 
சமீப காலமாகவே அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்து நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கங்களில் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகிறார். தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 
 
அந்நிலையில் அவரை திமுக பக்கம்  இழுக்க முயற்சிகள் நடப்பதாகவும், விரைவில் அவர் அந்த கட்சியில் இணைகிறார் எனவும் செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், நடிகை கஸ்தூரி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அனைத்து கட்சியிலும் என் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களை நான் அவ்வப்போது சந்திப்பது உண்டு. ஆனால் நான் என்னவோ சோத்துக்கட்சிதான்!.  இதுபோன்ற வதந்திகளை பரப்புவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்” என அவர் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.