ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 3 ஜூலை 2023 (13:20 IST)

கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். ஆனால் முந்தைய பாகத்துக்கும் இப்போது உருவாகும் படத்துக்கும் சம்மந்தம் இல்லை என்று கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.

ஜிகர்தண்டா 2 வில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். படம் பீரியட் திரைப்படமாக உருவாவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.