ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (14:59 IST)

விரைவில் சயின்ஸ்பிக்‌ஷன் வெப் சீரிஸ் – இளம் இயக்குனர் அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் மிக இளம் இயக்குனரான கார்த்திக் நரேன் ரசிகரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் விரைவில் சயின்ஸ் பிக்‌ஷன் வெப் சீரிஸை இயக்க உள்ளார்.

தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர்களில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளார் கார்த்திக் நரேன். இத்தனைக்கும் அவர் இயக்கியுள்ளது மூன்றே படங்கள்தான். அதில் ஒரு படம் ரிலீஸாகவில்லை. ஒரு படம் படுதோல்வி. ஆனாலும் தனுஷ் தனது அடுத்த படத்தின் வாய்ப்பினைக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த கார்த்திக் நரேன் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது உங்கள் இயக்கத்தில் அறிவியல் புனைகதை வெப் சீரிஸ் வருமா? எனக் கேட்டார். அதற்கு பதலளித்த கார்த்திக் நரேன் ‘ஒரு வெப் சீரிஸ் –விரைவில் வரும்’ எனக் கூறியுள்ளார்.