செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 23 மார்ச் 2018 (22:15 IST)

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் சந்திப்பு: அடுத்த படம் குறித்து ஆலோசனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தை பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. சன் பிக்சர்ஸ் நிறுவனம், பிரமாண்டமாக தயாரிக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது

இந்த நிலையில் இந்த படம் குறித்து ஆலோசனை செய்வதற்காக கார்த்திக் சுப்புராஜை ரஜினிகாந்த் அழைத்திருந்ததாகவும், அந்த அழைப்பை ஏற்று சற்றுமுன் கார்த்திக் சுப்புராஜ் போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அரசியல் கட்சியை தொடங்கவுள்ள நேரத்தில் இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த படமும் ஒரு அரசியல் கலந்த ஆக்சன் படமாக இருக்கும் என கருதப்படுகிறது

ரஜினி படத்திற்கு முதன்முதலாக அனிருத் இசையமைக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.