வீடு திரும்பினார் நடிகர் சூர்யா! நலமுடன் உள்ளார்! – கார்த்தி ட்வீட்
கொரோனா காரணமாக நடிகர் சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் வீடு திரும்பியுள்ளதாக அவரது சகோதரர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நாயகரான சூர்யா சமீபத்தில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவர் உடல் நலம் பெற பலர் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது சூர்யாவின் சகோதரரும் நடிகருமான கார்த்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “அண்ணன் நலமுடன் வீடு திரும்பினார். இன்னும் சில தினங்கள் அவர் தனிமைப்படுத்தலில் இருப்பார். அவருக்காக வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தையால் சொல்லிவிட முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.