1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 29 செப்டம்பர் 2022 (17:29 IST)

கார்த்தியின் '' சர்தார் ''பட டீசர் இன்று ரிலீஸ்....ரெட் ஜெயிண்ட் அறிவிப்பு

karthy
கார்த்தி     நடிப்பில் உருவாகியுள்ள  சர்தார் படத்தின் டீசர் இன்று  வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான சர்தார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டீஸர்  எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்தனர்.

இந்த நிலையில், இப்படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ள ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் தன் டுவிட்டர் பக்கத்தில்,  கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் படத்தின் டீசர் இன்று வெளியாகும் என உறுதி செய்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.