1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 16 பிப்ரவரி 2019 (19:27 IST)

கார்த்தியின் 'தேவ் ' படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு

கார்த்தி, ரகுல் பிரீத் சிங், காதல் கொஞ்சி நடித்துள்ள தேவ் படம் காதலர் தினத்தை  முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. தேவ் படம் குறித்து நெகட்டிவான விமர்சனங்களே எழுந்துள்ளன.


 
பெரும் பணக்காரரான கார்த்தி, ரகுல் பிரீத் சிங்கை காதலிக்கிறார். ஆனால் ராகுல் பிரீத்தி அவரை கண்டுகொள்ளாமல்விட,  கார்த்தி  அவரைப் பின்தொடர்ந்து போராடி காதலில் விழ வைக்கிறார். அதன் பின் இருவருக்குமிடையே நிகழும் ஊடலும் ஈகோ மோதல்களும்தான் படத்தின் கதை.
 
காதலை கொண்டாடும் வகையில் படம் இருக்கும் என எதிர்பார்த்து தியேட்டருக்கு போன  ரசிகர்களுக்கு தேவ் படம் ஏமாற்றத்தை தந்ததாக தெரிகிறது. பெரும்பாலான ரசிகர்கள் தேவ் படத்தில் கதை சரியாக வடிவமைக்கப்படவில்லை என குறைசொல்வதை பார்க்க முடிகிறது. கார்த்தி, ரகுல் பிரீத் சிங் இடையே கதையோ மற்றும் ரொமான்ஸோ பொருந்தும் வகையில் இல்லை என கூறியிருந்தனர். மேலும் ஹாரிஸ் ஜெயராஜின் இசை சுத்தமாக இந்த படத்தில் எடுபடவில்லை என்றும் பல விமர்சனங்கள் எழுந்தன. இப்படி நெகட்டிவான கமெண்டுகள் அதிகமாக வந்ததால், படக்குழுவினர் தேவ் படத்தின் காட்சிகளை  கொஞ்சம் எடிட் செய்தனர். மொத்தம் 15 நிமிடக் காட்சிகளை குறைத்து படத்தை மீண்டும் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இதன் மூலம் ஆடியன்ஸ் இம்ப்ரஸ் ஆவார்களா என்பது பொறுததிருந்து பார்ப்போம்.