செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 28 ஜனவரி 2022 (16:15 IST)

சர்வதேச போதை உலகம்… கார்த்தியை இயக்கும் அருண்ராஜா காமராஜா!

கார்த்தி இப்போது விருமன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

நடிகர் கார்த்தி இப்போது சர்தார் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அவர் தான் நடிக்கும் படங்களுக்கான கதையை இப்போதே கேட்க ஆரம்பித்து வருகிறார். இதுவரை 23 படங்களில் நடித்துள்ள கார்த்தி அடுத்து தனது 24 ஆவது படத்துக்கு இளம் இயக்குனர்களான அருண் ராஜா காமராஜா மற்றும் 8 தோட்டாக்கள் ஸ்ரீகணேஷ் ஆகியோரிடம் கதை கேட்டுள்ளாராம்.

அடுத்து தன்னுடைய 25 ஆவது படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கதையில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். அந்த படம் ஏதாவது ஒரு பயோபிக் படமாகவோ அல்லது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படமாகவோ இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இதில் ராஜுமுருகன் மற்றும் அருண் ராஜா ஆகியவர்களின் கதையை அவர் ஓகே செய்து வைத்திருக்கிறாராம். இதில் அருண் ராஜா காமராஜா சொல்லியுள்ள கதை சர்வதேச தளத்தில் போதை மருந்துகள் கடத்தப்படுவது குறித்தான கதையாம். அதற்கான சில ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறாராம் அருண் ராஜா.