திங்கள், 16 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 16 செப்டம்பர் 2024 (08:14 IST)

‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீஸாகி வெற்றிப் படமாக அமைந்தது.

இந்நிலையில் அவர் தனது அடுத்த படத்தில் கார்த்தியை இயக்கவுள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.  படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்துக்கு தற்காலிகமாக ‘கார்த்தி 29’ எனப் பெயர் வைக்கப்பட்டு போஸ்டர் ஒன்று வெளியாகியுளது. அதில் கடலில் ஒரு ராட்சச கப்பல் வருவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்துக்காக ராமநாதபுரத்தை களமாகக் கொண்டு ஒரு பீரியட் கதையை தமிழ் எழுதியுள்ளார். கார்த்தி, சர்தார் 2 படத்தை முடித்துவிட்டு இந்த படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.