புனித் ராஜ்குமாருக்கு மிகப்பெரிய விருது!
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் சமீபத்தில் எதிர்பாராத விதத்தில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு கர்நாடக மாநில முதல்வர் மிகப்பெரிய விருது ஒன்றை அறிவித்துள்ளார்
கர்நாடக மாநிலத்தின் மிகப்பெரிய விருதான கர்நாடக ரத்னா என்ற விருது புனித் ராஜ்குமார் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் அறிவித்துள்ளார்
மேலும் புனித் ராஜ்குமார் நினைவிடம் மற்றும் அவரது பெற்றோரிர் நினைவிடங்கள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் புனித்ராஜ்குமார் அவர்களுக்கு தேசிய விருது அளிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்
இன்று நடந்த நிகழ்வில் முதல்வர் பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.