திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 22 மார்ச் 2021 (07:45 IST)

கர்ணன் படத்தை வாங்க போட்டி போட்ட ஓடிடி நிறுவனங்கள்: வெற்றி பெற்றது யார்?

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது
 
இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதால் நல்ல வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்து ஓடிடியில் ரிலீஸ் செய்ய இந்த படத்தின் உரிமையை வாங்க இரண்டு ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டன 
 
குறிப்பாக நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இடையே கடும் போட்டி இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி அமேசான் பிரைம் இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்று விட்டதாகவும் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்து அமேசான் பிரைமில் இந்த திரைப்படம் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது
 
 இது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிவிட்டதாகவும், அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது