1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva

’கர்ணன்’ படத்தில் நடித்த குதிரை மறைவு: மாரி செல்வராஜ் டுவிட்!

’கர்ணன்’ படத்தில் நடித்த குதிரை மறைவு: மாரி செல்வராஜ் டுவிட்!
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷ் குதிரையில் ஏறி வருவது போன்ற காட்சிகள் இருக்கும் என்பதும் அந்த காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் ’கர்ணன்’ படத்தில் வந்த குதிரை திடீரென இறந்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை இயக்குனர் மாரி செல்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் 
 
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அலெக்ஸ் என்ற குதிரையின் புகைப்படத்தை பதிவு செய்து இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். மேலும் இதயம் நொறுங்கியது போன்ற ஒரு எமோஜியையும் பதிவு செய்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த குதிரை எப்படி இருந்தது என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை