1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 29 அக்டோபர் 2022 (16:15 IST)

காந்தாரா படத்தின் "வராக ரூபம்" பாடலுக்கு தடை: ரசிகர்கள் அதிர்ச்சி!

kantara
ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள "வராக ரூபம்" என்ற பாடல் அப்பட்டமான காப்பி என நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் வரை "வராக ரூபம்" பாடலுக்கும் மனுதாரர் குறிப்பிட்ட பாடலுக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதால் இந்த பாடலை படக்குழுவினர் பயன்படுத்தக்கூடாது என அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது
 
இதனால் திரையரங்குகளில, ஓடிடியில், யூடியூபில் "வராக ரூபம்" பாடல் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ள.து இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் "வராக ரூபம்"படக்குழுவினர் இதுகுறித்து வழக்குப் போட்டவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran