ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 14 டிசம்பர் 2023 (10:06 IST)

காந்தாரா இயக்குனரிடம் எக்ஸ் தளத்தில் வாய்ப்புக் கேட்ட பிரபல நடிகை!

கடந்த ஆண்டு ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். ஆனாலும் பல மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடி 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.

இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகள் தொடங்கியுள்ளது. இரண்டாம் பாகம் பற்றி பேசிய இயக்குனர் ரிஷப் ஷெட்டி “காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம்.  இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட உள்ளது. இந்த படத்தில் தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும்.” எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில் இதன் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் டிசம்பர் மாதத்தில் ஷூட்டிங் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் இலங்கையின் வனப் பகுதிகளில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கு ஷூட்டிங் முடிந்த பின்னர் கர்நாடகாவின் உடுப்பியில் அடுத்த கட்ட ஷூட்டிங் நடக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பிரபல நடிகையான பாயல் ராஜ்புத் எக்ஸ் தளத்தில் ரிஷப் ஷெட்டியை டேக் செய்து காந்தாரா சேப்டர் 1 ல் நடிக்க வாய்ப்புக் கேட்டுள்ளார். அதில் “காந்தாரா சேப்டர் 1 படத்துக்கான ஆடிஷன் நடப்பதாக கேள்விப்பட்டேன். அந்த பெருமைமிகு படத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்க ஆசைப்படுகிறேன். சமீபத்தில் நான் நடித்த மங்களாவரம் என்ற படம் நல்ல வரவேற்பைப் பெற்று என் நடிப்பு பாராட்டப்பட்டது. அதை நீங்கள் பார்க்க முடிந்தால் மகிழ்ச்சி அடைவேன். மேலும் ஆடிஷனில் கலந்துகொள்வது பற்றியும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.