1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 7 மே 2021 (16:05 IST)

நான் ரொம்ப பிசி... அடுத்தடுத்த படங்களில் கன்னிமாடம் புகழ் நடிகர் ஸ்ரீ ராம் கார்த்திக்!

கன்னிமாடம் படத்தில் தனது இயல்பான நடிப்பால் அனைவர் கவனத்தையும் ஈர்த்தவர் ஸ்ரீ ராம் கார்த்திக் இப்படத்தை தொடர்ந்து சிறந்த கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். 
 
தற்போது மங்கி டாங்கி என்ற படத்தில் நடித்து வருகிறார், இந்தப் படம் பெற்றோர்கள் குழந்தைக்காக வாழ்வதை விட குழந்தையோடு அதிகமாக இருப்பதன் முக்கியத்துவத்தை விளக்கும் விதமாக  அமையவிருக்கிறது.
 
ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ஆக்ஷன் படமாக யுத்த காண்டம் உருவாகியுள்ளது.  இதையடுத்து லிவ்விங் டு கெதர் என்ற படத்திலும் நடித்து வருகிறார், இப்படம் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையின் சுவாரஸ்யங்களை விளக்கும் படமாக அமையவிருக்கிறது. 
 
முன்னணி எழுத்தாளராக இருக்கும் அஜயன் பாலா இயக்கத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார். மேலும் நல்ல கதைக்கரு கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.