திங்கள், 18 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 20 ஜூலை 2016 (14:30 IST)

சென்னையில் கன்னட திரைப்படவிழா

சென்னையில் கன்னட திரைப்படவிழா

சென்னையில் உள்ள ரஷ்ய பண்பாட்டு மையத்தில் கன்னட திரைப்படவிழா 28-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.


 


இந்த விழாவை கர்நாடக சுற்றுலா துறை அமைச்சர் பியங்கா கார்கே தொடங்கி வைக்கிறார். திரைப்பட விழாவில் கர்நாடகாவில் வசூல் குவித்து விருதுகள் வாங்கிய 10 கன்னட மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
 
28-ந்தேதி திதி படமும் 29-ந்தேதி மிஸ்டர் அன்ட் மிஸிஸ் ராமாசாரி படமும் 29-ந்தேதி பஸ்ட் ராங்க் ராஜு படமும் 30-ந்தேதி ராங்கி தரங்கா, சிவலிங்கா படங்களும் 31-ந்தேதி கர்வா, யு டர்ன், மாரிகொன்டாவரு படங்களும் திரையிடப்படுகின்றன. மேலும் 2 கன்னட படங்களும் திரையிடப்படுகிறது. 
 
இதில் திதி திரைப்படம் உலக அளவில் கவனம் பெற்று சர்வதேச விருதுகளை வென்று வருகிறது. யு டர்ன் திரைப்படம் லூசியா படத்தை இயக்கியவரின் இரண்டாவது படம். சிவலிங்கா நம்மூர் பி.வாசு இயக்கியது. 
 
தவறவிடக்கூடாத திரைப்பட விழா.