1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 3 அக்டோபர் 2023 (07:13 IST)

சந்திரமுகி 2 சொதப்பினாலும் உடனடியாக அடுத்த தமிழ்ப் படத்தை தொடங்கும் கங்கனா!

ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் சந்திரமுகி 2 படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மரகதமணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இந்த படம் கடந்த வாரம் ரிலீஸாகி மிக மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கங்கனாவின் நடிப்பும் ரசிகர்களை கவரவில்லை. இந்நிலையில் இப்போது கங்கனா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்த படம் விரைவில் உருவாக உள்ளது. இந்த திரைப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்தரன் இயக்க உள்ளார்.

இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.