வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2023 (08:32 IST)

வீடு புகுந்து தாக்குவேன்… யாரை சொல்கிறார்?- கங்கனா ரனாவத் பதிவால் சர்ச்சை

பாலிவுட்டின் சர்ச்சை நாயகியாக வலம் வருகிறர கங்கனா ரனாவத். சக பாலிவுட் கலைஞர்கள் பலரையும் பற்றி கடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் தெரிவித்த ஒரு குற்றச்சாட்டில் “தான் எங்கு சென்றாலும் தன்னை பின் தொடர்ந்து வந்து உளவு பார்க்கிறார்கள் என்றும் தெருக்கள், பார்க்கிங் இடஙள், மற்றும் வீட்டு  மாடியிலும் தன்னை உளவு பார்ப்பதாகவும் இதற்கென ஜூம் லென்ஸை கையில் வைத்திருப்பதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.

கங்கனா யார் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும்,  பாலிவுட் நட்சத்திர ஜோடி ஒன்றைப் பற்றிதான் அவர் குறிப்பிடுகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது இது தொடர்பாக ”சொல்வதை புரிந்து கொள்ளாதவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை.  உங்களை சரிசெய்து கொள்ள எச்சரிக்கிறேன். இல்லை என்றால் வீட்டுக்குள் வந்து தாக்குவேன். நான் எந்த அளவுக்கு செல்வேன் என்று செல்வேன் என்பது யாருக்கும் தெரியாது” எனக் கூறியுள்ளார்.