வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 1 நவம்பர் 2023 (08:53 IST)

தேஜஸ் படம் தோல்வியடைய வேண்டும் என தேச விரோதிகள் சதி செய்கிறார்கள்: கங்கனா ரனாவத்

எனது திரைப்படம் தோல்வி அடைய வேண்டும் என்று  தேச விரோதிகள் சதி செய்கிறார்கள் என நடிகை  கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு தெரிவித்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
பிரபல பாலிவுட் நடிகை  கங்கனா ரனாவத் நடிப்பில் உருவான தேஜஸ் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது.  இந்த படம் நாடு முழுவதும் பெரும் தோல்வியை தழுவியது என்பதும்  60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் நான்கு கோடி ரூபாய் கூட வசூல் ஆகவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து  கங்கனா ரனாவத் செய்தியாளர்களிடம் பேசிய போது ’எனது படத்தை தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்ன தேச விரோதிகள் சதி செய்கிறார்கள் என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.  

ஏற்கனவே  கங்கனா ரனாவத் நடித்த சந்திரமுகி 2 திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அதற்கு முன்னர் அவர் பாலிவுட்டில்  கங்கனா ரனாவத் நடித்த  தாக்கட் என்ற திரைப்படமும் படுதோல்வியை அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வரிசையாக  கங்கனா ரனாவத் நடிக்கும் படங்கள் படுதோல்வி அடைந்து வருவதை அடுத்து அவர் விரக்தியின் உச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva